search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரிகள் சிறைபிடிப்பு"

    ஒட்டன்சத்திரத்தில் மணல் திருட வந்த லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் கொல்லப்பட்டி குளத்தில் கடந்த சில நாட்களாக மணல் திருட்டு நடந்து வந்தது. இரவு நேரங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் அதக அளவு லாரிகள் கொண்டு வரப்பட்டு மணல் திருடிச் சென்றனர்.

    நேற்று இரவு 8 லாரிகளில் டிரைவர் மற்றும் பணியாளர்கள் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டனர். லாரிகள் மற்றும் மணல் திருடியவர்களை சிறை பிடித்து வைத்தனர். இது குறித்து போலீசார் மற்றும் தாலுகா அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தாலுகா அலுவலகத்தில் இருந்து தாசில்தாரோ, வருவாய்த்துறை அலுவலர்களோ யாரும் வரவில்லை. இரவு முழுவதும் பொதுமக்கள் லாரிகளை நகர விடாமல் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலையிலும் அதே நிலை தொடர்ந்தது. இதனால் போலீசார் வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மணல் திருட்டு நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்தனர். ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் வராததால் மிகுந்த வேதனையடைந்த பொதுமக்கள் நேற்று இரவு புகார் தெரிவித்து நாங்கள் விடிய விடிய காத்திருந்த நிலையிலும் ஒருவர் கூட வராதது அதிர்ச்சியளிக்கிறது.

    மணல் திருட்டு நடைபெற்றால் புகார் அளிக்க கூறும் அவர்கள் நாங்கள் தெரிவித்த பின்னும் வராததது ஏன்? என கேள்வி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×